search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீசாருக்கு கொரோனா

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பணியாற்றி வந்த போலீஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் அவினாசி போலீஸ் நிலையம், பல்லடம் டி.எஸ்.பி. அலுவலகம், திருப்பூர் மாநகரில் உள்ள வீரபாண்டி போலீஸ் நிலையம், உடுமலைப்பேட்டை ரோந்து போலீசார் என பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் திருப்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பூர் காமநாயக்கன் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருடன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பணியாற்றி வந்த போலீஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×