search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.
    X
    ராமேசுவரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.

    ராமேசுவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தம்

    மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலைச் சார்ந்துள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ராமேசுவரம்:

    மீன்களின் இனப்பெருக்கத்தை கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்க கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.

    இந்த காலங்களில் மீன்கள் இறால், நண்டு ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்ப்பது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.

    மேற்கண்ட 3 மாதங்களில் மீனவர்கள் குடும்பத்தை நடத்த வேறு வேலை தேடி செல்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று (15-ந்தேதி) முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் கடலுக்கு சென்று இருந்த ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பினார்கள்.

    தடை காலத்தை முன்னிட்டு கடலுக்குள் செல்வதற்கான டோக்கன்கள் வழங்கப்படவில்லை. ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

    மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலைச் சார்ந்துள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×