search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தருமபுரி அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று

    தருமபுரி மாவட்டத்தில், நேற்று கொரோனா தொற்று சதத்தை நெருங்கியதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பல மாதங்களுக்கு பின் நேற்று, ஒரே நாளில், 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தருமபுரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப் பட்டனர். மாவட்டத்தில் நேற்று வரை 7,156 பேர் தொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 6,738 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 363 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த, பல மாதங்களுக்கு பின், ஒரே நாளில் நேற்று, 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி அன்னசாகரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கப்படாததால் மாணவர்கள் வருவதில்லை. ஆனால் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து செல்லுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

    இந்த நிலையில் இப்பள்ளியை சேர்ந்த 43 வயதான ஆசிரியர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து, சுகாதாரதுறையினர் அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் ஆசிரியருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பள்ளியில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×