search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் இன்று மழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம் தகவல்

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழையானது, கோடை வெப்பத்தை சற்று தணித்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய  பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்

    சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.

    இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×