search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் புளியரையில் கொரோனா பரிசோதனை

    தென்காசியில் இருந்து செங்கோட்டை வழியாக எல்லை பகுதியான கோட்டைவாசலுக்கு தமிழக அரசு பஸ்கள் சென்று வருகிறது. பின்பு அங்கு இருந்து கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளை ஏற்றி கொண்டு வருகிறது.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் 2-ம் கட்ட கொரோனா அலை வீசத் தொடங்கியுள்ளதால் அதனை கட்டுப்படுத்த வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வருவோர்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் கடந்த ஓராண்டாக தொடரும் கொரோனா தொற்று காரணமாக எல்லை மாவட்டமான தென்காசி புளியரை சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அங்கிருந்து வரும் பயணிகளிடம் இ-பாஸ் நடைமுறை தீவிரமாக கடை பிடிக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் முகாமில் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    தென்காசியில் இருந்து செங்கோட்டை வழியாக எல்லை பகுதியான கோட்டைவாசலுக்கு தமிழக அரசு பஸ்கள் சென்று வருகிறது. பின்பு அங்கு இருந்து கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளை ஏற்றி கொண்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள், கார், வேன், மற்றும் பஸ்களில் வரும் பயணிகளின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் உள்பட முழு விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் காய்ச்சல் உள்ளதா? என கண்டறியப்படுகிறது. காய்ச்சல் இல்லை என்றால் அனுமதிக்கப் படுகிறார்கள்.

    காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு சளிமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தினமும் 100 முதல் 120 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

    தென்காசி கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் மாரிச்செல்வி அறிவுறுத்தலின் படி தற்போது கூடுதலாக மருத்துவ குழுவின் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வகையில் சுகாதார ஆய்வாளர் தலைமையில் பரிசோதகர் மற்றும் உதவியாளர் என 6 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு, கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர்.

    Next Story
    ×