search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயணிகள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
    X
    பயணிகள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

    சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

    சாத்தான்குளம் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின் பேரில் அரசு மருத்துவமனை சித்த பிரிவு சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கி, கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வைகுண்டரமணி முன்னிலை வகித்தார். இதில் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், வருவாய்த்துறை முதுநிலை உதவியாளர்கள் கணேஷ்குமார், சின்னத்துரை, மருந்தாளுனர் சங்கரமணி, பன்னம்பாறை இயற்கை உணவு மற்றும் நல்வாழ்வு மைய நிர்வாக இயக்குனர் ஜோதி தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மருந்தாளுனர் ராஜேஸ்வரி, மருத்துவ பணியாளர்கள் சிவசைலம், பாண்டியம்மாள், மந்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×