search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை மாநகர பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை கண்காணிக்க 12 குழுக்கள்

    நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் பொதுவெளியில் செல்லும்போது சமூகஇடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நெல்லை:

    கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்காணிக்க நெல்லை மாநகராட்சி கமி‌ஷனர் கண்ணன் 12 குழுக்களை நியமித்துள்ளார். இந்த குழுக்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விதிமுறைகளை மீறுவோர் குறித்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அவ்வாறு கண்டறியப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் பொதுவெளியில் செல்லும்போது சமூகஇடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி சானிடைசர், சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×