search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஒரே நாளில் 94 பேருக்கு தொற்று- மூடப்பட்ட கொரோனா வார்டுகள் மீண்டும் திறப்பு

    திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் 150 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரேநாளில் 94 பேருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து மாவட்டத்தில் ஒரேவாரத்தில் 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானலில் நேற்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் செயின்ட்மேரீஸ் ஆலையில் உள்ள தூர்தர்‌ஷன் நிலையத்தில் பணிபுரியும் 2 பொறியாளர்கள், கான்வென்ட் சாலை பகுதியை சேர்ந்த 44 வயது ஆண், 40 வயது பெண், 18 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதேபோல் வில்பட்டி பகுதியை சேர்ந்த 26 வயது பெண், கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் 42 வயதுடைய வீரர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 18 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 50-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும் சிகிச்சை பெறுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு மட்டும் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

    பழனி, கொடைக்கானலில் தொற்று குறைவாக இருந்ததால் அந்த வார்டுகள் மூடப்பட்டன. தற்போது கொடைக்கானலில் 30, பழனியில் 40 படுக்கைகள் கொண்ட வார்டுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் 150 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டு வருகிறது.இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பழனி அண்ணாநகரை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×