search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

    தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
    சென்னை:

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது.

    * வாக்காளர்கள் நாளை மாஸ்க் அணிந்துதான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

    * வாக்குப்பதிவின்போது கடைசி ஒரு மணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்.

    * தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்.

    * 54 லட்சம் கொரோனா தடுப்பூசி நம்மிடம் இருந்தாலும் தினமும் 15 ஆயிரம் பேர்தான் தடுப்பூசி போடுகின்றனர்.

    கொரோனா தடுப்பூசி

    * கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    * ஏப்.7ந்தேதிக்கு பிறகு கொரோனா பரவாமல் தடுக்க வீடு வீடாக காய்ச்சல் குறித்து நேரில் ஆய்வு செய்யப்படும்.

    * காய்ச்சல் வந்தால் தள்ளிப்போடாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

    * மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்பு போல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    * ஏப்.7ந்தேதிக்கு பிறகு தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.

    * தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×