search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

    தற்போது தேர்தல் நடைபெறுவதால் யாருக்கும் 5 பாட்டில்களுக்கு மேல் விற்ககூடாது என்று தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடு விதித்திருந்தது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 6-ந்தேதி வரை 3 நாட்களுக்கு 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டிருக்கும்.

    'டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் தகவல் நேற்று அறிவிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால் குடிமகன்கள் கூட்டம் ஒவ்வொரு மதுக்கடைகளிலும் அதிகம் காணப்பட்டது.

    துரைப்பாக்கம், கிண்டி, குன்றத்தூர், அம்பத்தூர், டி.பி.சத்திரம், புழல், மாதவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயல் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் முண்டியடித்தபடி மதுபாட்டில்கள் வாங்கினார்கள்.

    ஒருசில இடங்களில்தான் வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கினார்கள். ஒரு நபருக்கு 5 பாட்டில்களுக்கு மேல் விற்க கூடாது என்பதால் 4 பாட்டில்கள் வரை மதுவை கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

    வீட்டில் இருப்பு வைப்பதற்காக சாக்குப்பை, அட்டைப்பெட்டிகளில் மதுபாட்டில்களை வாங்கி இருசக்கர வாகனத்தில் வேக வேகமாக எடுத்துச்சென்றதை பல இடங்களில் காண முடிந்தது. இதனால் ஒவ்வொரு கடைகளிலும் வழக்கத்திற்கு அதிகமாகவே விற்பனை நடைபெற்றது.

    கோப்புப்படம்

    நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக 'டாஸ்மாக்' அதிகாரி தெரிவித்தார்.

    வழக்கமாக ஒவ்வொரு நாளும் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாவது வழக்கம்.

    தற்போது தேர்தல் நடைபெறுவதால் யாருக்கும் 5 பாட்டில்களுக்கு மேல் விற்ககூடாது என்று தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடு விதித்திருந்தது. ஒவ்வொரு கடையிலும் வழக்கமான விற்பனையை விட 30 சதவீதத்துக்கு மேல் விற்பனை அதிகரிக்க கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தது.

    இதன்படி கைவசம் இருந்த மதுபாட்டில்கள் விற்பனையானதும் முன்கூட்டியே கடைகளை மூடிவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×