search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்ட காட்சி.
    X
    வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்ட காட்சி.

    வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி- கலெக்டர் பார்வையிட்டார்

    குமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் என சுமார் 16 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது.

    கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கு மறவன்குடியிருப்பில் உள்ள செயின்ட் அல்போன்சா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு ராமன்புதூர் புனித ரெமிஜியூஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியிலும், குளச்சல் சட்டசபை தொகுதிக்கு சுங்கான்கடை புனித சேவியர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியிலும், கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு கருங்கல் பெத்தலகேம் மெட்ரிக் பள்ளியிலும் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார்.
    Next Story
    ×