search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அரவிந்த்"

    • ஓணம் பண்டிகையை முன் னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்க ளுக்கும் 8-ந்தேதி (நேற்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
    • 10-ந்தேதி வேலை நாள் ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    நாகர்கோவில், செப்.9-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓணம் பண்டிகையை முன் னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்க ளுக்கும் 8-ந்தேதி (நேற்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த உள்ளூர் விடு முறைக்கு ஈடாக 10-ந்தேதி குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என்று முதலில் அறிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் வருகிற

    10-ந்தேதி வேலை நாள் ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறைக்கு பதிலான வேலை நாள் பின்னர் அறிவிக் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற வுள்ள கிராம சபைக்கூ ட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்தி ட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் கலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண்வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக்கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று காலை 11 மணியளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்கவு ள்ளனர்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற வுள்ள கிராம சபைக்கூ ட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்தி ட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
    • கலெக்டர் அரவிந்த் பேச்சு

    நாகர்கோவில்:

    சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை நடத்தின.

    களியக்காவிளை பேருந்து நிலையம், மேல்பாலை சந்திப்பு, மார்த்தாண்டம் காவல் நிலையம், குலசேகரம் பேருந்து நிலையம், இணையம் பேருந்து நிலையம், கருங்கல் பேருந்து நிலையம், ஆலஞ்சி பேருந்து நிலையம், அருமனை சந்திப்பு, குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், முட்டம் கலங்கரை விளக்கம்,

    வில்லுக்குறி சந்திப்பு, இராஜாக்கமங்கலம் காவல் நிலையம், சுங்கான்கடை சந்திப்பு, பள்ளம், எட்டாமடை பேருந்து நிலையம், அஞ்சுகிராமம் பேருந்து நிலையம், தென்தாமரைகுளம் பேருந்து நிலையம், ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம், கன்னியாகுமரி காந்தி மண்டபம், கார்மல் போதை நோய் நலப்பணி மையம், இராமன்புதூர் ஆகிய 21 பகுதிகளிலிருந்து தொடங்கிய ஜோதி ஓட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

    உலகபோதை தடுப்பு விழிப்புணர்வு தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.குமரி மாவட்டத்தில் போதைபொருள் உட்கொள்வதை தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் தொண்டு நிறுவனங்களின் முழு ஒத்துழைப்புடன் நடை பெற்று வருகிறது.

    இன்றைய சூழலில் 16 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இது மிகவும் வேதனை அளிக்ககூடியதாக உள்ளது. இப்பழக்கத்தினை மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். போதைப்பொருள் இல்லா குமரி மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஜோதி ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பாராட்டி கலெக்டர் அரவிந்த் கேடயங்களை வழங்கினார். மேலும் போதை புழக்கத்தில் இருந்து மீண்ட நபர்களை கவுரவப்படுத்தினார்.

    நிகழ்சியில் போதை ப்பொருளுக்கு எதிரான கண்கவர் கலை நிகழ்ச்சியும் நடந்தது. போதை பொரு ட்களுக்கு எதிராக உறுதி மொழியையும் கலெ க்டர் அரவிந்த் தலைமை யில் நிகழ்ச்சியில் ப ங்கேற்றவர்கள் எடுத்து க்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, திருப்புமுனை போதை மறுவாழ்வு மைய இயக்குநர் நெல்சன், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வு மைய இயக்குநர் அருள்ஜோதி, நியூ பாரத் டிரஸ்ட் இயக்கு நர் அருண்குமார், அக ஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை
    • கலெக்டர் அரவிந்த் செய்தி குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக் அரவிந்த விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கன்னியாகுமரி மாவட் டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2022-23ம் ஆண்டு மாநில தோட்டக் கலை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் ரூ.60 லட்சத்து 87 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல் இனத்தின் கீழ் 8 எண்ணத் திற்கு ரூ.64,000 நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மாணவியர் விடுதி ஒன்றிற்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.8,000 மதிப்பிலான பழச் செடிகள். மூலிகை செடிகள், தென்னங்கன்றுகள், காய் கறி விதைகள், தோட்டக் கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அரசு மாணவியர் விடுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    உயர் விளைச்சல் துல்லிய பண்ணையத் திட்டத்தின் கீழ் 48 ஹெக்டேருக்கு ரூ 7 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்பட உள்ளது. நுண்ணீர் பாசன வசதியை பெற்றுள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.

    ஒரு ஹெக்டேருக்கு ரூ.15.000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும். கூடுதல் வருமானம் ஈட்டும் சிறு தொழில் இனத்தின் கீழ் எண்ணத்திற்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காளான் வளர்ப்பு கூடம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.50,000 வழங்கப்படும்.

    உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டத் தின் கீழ் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

    ஊடுபயிர் சாகுபடி இனத்தின் கீழ் தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடும் விவ சாயிகளுக்கு 70 ஹெக்டே ருக்கு ரூ.18 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடுசெய் யப்பட்டுள்ளது. இதில் பய னாளிக்கு முதலாண்டிற்கு மானியத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.26.250 மதிப்பிலான இடுபொ ருட்கள் வழங்கப்படும்.

    வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் பயிரிடும் விவ சாயிகளுக்கு 100 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான் இடுபொருட்கள் வழங்கப்படும்.

    தோட்டக்கலை கரு விகள் மற்றும் உபகரணங் கள் விநியோகம் இனத்தின் கீழ் நெகிழி கூடைகள் 10 எண்ணத்திற்கு ரூ.37,500 அலுமினிய ஏணிகள் 40 எண்ணத்திற்கு ரூ.4 லட் சம். பழங்கள் அறுவடை செய்ய பயன்படுத்தும் வலைக் கருவி 30 எண்ணத்திற்கு ரூ.7,500, மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு 50 எண்ணத்திற்கு ரூ.12,500, கவாத்து கத்திரி 100 எண்ணத்திற்கு ரூ.20,000 நாப்ஸாக் தெளிப்பான் (8-12 லிட்டர்) 15 எண்ணத்திற்கு ரூ.57,000 போன்ற அலகுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்படும்.

    இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார உதவி தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×