search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க சார்பில் சைக்கிள் பேரணி.
    X
    தி.மு.க சார்பில் சைக்கிள் பேரணி.

    அவினாசியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி

    அவினாசி ஒன்றிய தி.மு.க சார்பில் ஸ்டாலின் வாராரு விடியல் தரப்போறாரு என்ற பாடலை ஒலிபரப்பியபடி சைக்கிள் பேரணி நடந்தது.
    அவினாசி:

    அவினாசி ஒன்றிய தி.மு.க சார்பில் ஸ்டாலின் வாராரு விடியல் தரப்போறாரு என்ற பாடலை ஒலிபரப்பியபடி சைக்கிள் பேரணி நடந்தது. சைக்கிள் பேரணியை நகர தி.மு.க முன்னாள் அவைத்தலைவர் ராமசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

    அவினாசி சூளை பகுதியிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி செங்காடு, தாலுகா அலுவலகம், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, பழைய பஸ் நிலையம் வழியாகபுதிய பஸ் நிலையம் வரை சென்றது. 

    தி.முக. ஒன்றிய பொறுப்பாளர் சிவப்பிரகாஷ் தலைமையில், நடந்த சைக்கிள் பேரணியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், நகர செயலாளர் பொன்னுசாமி, உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×