search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமக தலைவர் ஜி.கே.மணி
    X
    பாமக தலைவர் ஜி.கே.மணி

    பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்

    பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் 23ம் தேதி முதல் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம்.
    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், விருப்ப மனுக்களை பெற்று வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறையை தொடங்கி உள்ளன.  

    அவ்வகையில், தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட, வரும் 23ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பிப்ரவரி 23ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. 

    சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மண்டல அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். வரும் 23ம் தேதி காலை 10.30 மணி முதல் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று நிரப்பி, உரிய ஆவணங்களுடன்  தாக்கல் செய்யலாம். 

    பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு கட்டணமாக ரூ.10000, தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5000, பெண்கள் ரூ.5000 வீதம் செலுத்த வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×