search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த குரங்குகளை படத்தில் காணலாம்.
    X
    வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த குரங்குகளை படத்தில் காணலாம்.

    வரதப்பனூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 29 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்

    கள்ளக்குறிச்சி அருகே வரதப்பனூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 29 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனகாப்புக்காட்டில் விட்டனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வரதப்பனூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தியும், பொருட்களை சேதப்படுத்தியும் வந்தன. மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களையும் கடித்து அட்டகாசம் செய்து வந்தது. குரங்குகளின் சேட்டையை கண்டு கிராமமக்கள் அச்சம் அடைந்தனர்.

    எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான தேவேந்திரன் இந்திலியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

    இதைத் தொடர்ந்து வரதப்பனூர் கிராமத்துக்கு வந்த வனத்துறையினர் கூண்டு வைத்து 29 குரங்குகளை பிடித்தனர். பின்னர் அவற்றை வனகாப்புக்காட்டில் விட்டனர்.
    Next Story
    ×