search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்குகள் அட்டகாசம்"

    • அங்குள்ள அரசு பள்ளிகளிலும் சாப்பாட்டு வேலையில் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது.
    • கேபில் வயர் மீது தாவி செல்வதால் வயர்கள் அறுந்து விழுகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணசிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சூளகிரி ஊராட்சி பகுதிகளான கோட்டை தெரு, வாணியர் தெரு, கீழ் தெரு, மூஸ்லீம் தெரு, கே.கே நகர், ஒசூர் பேரிகை சாலை பகுதி, அண்ணா நகர், கமலா காலனி, ஒசூர் கிருஷ்ணகிரி சாலை பகுதி, நெசவாளர் தெரு, மற்றும் பல பகுதி களில் குரங்குகள் தொடர்ந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    மேலும் குரங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து சமையல் , காய்கறிகள், பழங்கள், உணவு ஆகிய வற்றை எடுத்து செல்கிறது.

    மேலும் வீட்டு தோட்டத்தில் செடிகள் எதுவுமே வளர்க்க முடியாத நிலை எற்பட்டு வருகிறது.

    இது மட்டும் இல்லாமல் அனைவரையும் கடிக்கும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள அரசு பள்ளிகளிலும் சாப்பாட்டு வேலையில் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கேபில் வயர் மீது தாவி செல்வதால் வயர்கள் அறுந்து விழுகிறது.

    இதனால் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பொதுமக்கள் மகிழ்ச்சி
    • வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சில மாதங்க ளாகவே அதிகப்படியான குரங்குகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இவை அங்கு இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதும், வீடு, கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும், மேலும் குழந்தைகளை மிரட்டி வருவதுமாக அட்டகாசத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே இருந்து வந்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதியிடம் கூறினர். சுகன்யா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வனத்துறை அதிகாரிகளிடம் சென்று குரங்கு பிடிக்கும் கூண்டினை பெற்றுக்கொண்டு அப்பகுதி இளைஞர்களின் மூலம் சுமார் 25 குரங்குகள் பிடிக்கப்பட்டது.

    பின்னர் அருகே இருந்த தீர்த்தம் வனப்பகுதியில் கொண்டு போய் பிடிப்பட்ட குரங்குகளை பத்திரமாக கொண்டு போய் விட்டனர். இந்த செயலால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • சென்னிமலை வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்னிமலை நகர பகுதிக்கு வந்து விட்டன.
    • சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்னிமலை நகர பகுதிக்கு வந்து விட்டன. வீட்டு மொட்டை மாடிகளில் காய வைத்திருக்கும் உணவு பொருட்களை எடுத்து தின்பது, குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்துவது, கடைகளில் உள்ள பொருட்களை நாசப்படுத்துவது, கேபிள் வயர்களை அறுப்பது என நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்தது.

    இதனால் சென்னிமலையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஈரோடு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து சென்னிமலை நகர பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டுகள் வைத்து பிடித்தனர்.

    கூண்டுக்குள் 7 குரங்குகள் சிக்கிக்கொண்டன. பின்னர் அவற்றை வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கிவிடும் என்றனர்.

    • தினமும் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் செல்லும் கவின் நேற்றும் காலையில் பள்ளிக்கு புறப்பட்டான்.
    • கவின் வீட்டை தாண்டி சிறிது தொலைவில் செல்லவும், திடீரென்று வெள்ளை மந்தி(குரங்கு) ஒன்று அவன் மீது பாய்ந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள வடக்கு அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கவின் (வயது 14).

    இவன் வி.கே.புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் செல்லும் கவின் நேற்றும் காலையில் பள்ளிக்கு புறப்பட்டான். அவனது வீட்டை தாண்டி சிறிது தொலைவில் செல்லவும், திடீரென்று வெள்ளை மந்தி(குரங்கு) ஒன்று அவன் மீது பாய்ந்தது.

    அந்த குரங்கு அவனது வலது காலை பிடித்து, கடித்துக் குதறியது. அட்டை பூச்சியை போல ஒட்டிக்கொண்டு விடவில்லை. வலி தாங்க முடியாமல் சிறுவன் கவின் அலறி துடிக்கவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குரங்கை கம்பால் அடித்து உதைத்தனர். இதனால் குரங்கு அங்கிருந்து ஓடியது.

    படுகாயம் அடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வனத்துறை சார்பில் சம்பவம் நடந்த வடக்கு அகஸ்தியர்புரத்திற்கு அருகே கோட்டைவிளைப்பட்டியில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்திற்கு அருகே கூண்டு ஒன்று நேற்று இரவு வைக்கப்பட்டது. அந்த கூண்டில் வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை அந்த கூண்டில் 12 குரங்குகள் சிக்கின.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'வடக்கு அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி சுமார் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் நடமாடி வருகின்றன. இந்த குரங்குகள் உணவுக்காக வரும்போது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவனை குரங்கு கடித்து குதறியுள்ளது. வனத்துறையினர் கூண்டு வைத்து 12 குரங்குகளை பிடித்துள்ளனர். இன்னும் மீதம் உள்ள குரங்குகளையும் பிடிக்க வேண்டும். எங்களுக்கு வெளியில் நடமாடவே பயமாக உள்ளது.

    கரடி, யானை ஆகியவற்றுக்கு பயந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது குரங்கு தொல்லையாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். தற்போது பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

    • திருத்தணி மலைக்கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.
    • சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கோவிலுக்குள் இருந்த குரங்குள் அனைத்தும் வெளியே விரட்டப்பட்டன.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் முருகப் பெருமானின் 5-ம் படை வீடாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    திருத்தணி மலைக்கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இங்கு தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்கள் வைத்திருக்கும் பழம் உள்ளிட்ட பொருட்களை பறித்து செல்வதும், பல நேரங்களில் பக்தர்களை கடித்த சம்பவமும் நடந்து உள்ளது.

    இதனால் திருத்தணி கோவிலில் குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் சுற்றித் திரிந்த சில குரங்குகள் பிடிக்கப்பட்டன. ஆனாலும் அதன் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. குரங்குகளின் எண்ணிக்கை சில மாதங்களிலேயே மீண்டும் அதிகரித்து விட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் சுமார் 50 குரங்குகள் கூட்டமாக கோவிலுக்குள் புகுந்தன. குரங்குகள் பக்தர்களை மிரட்டியபடி அட்டகாசம் செய்தன. இதனால் பக்தர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

    அப்போது சில குரங்குகள் மூலவர் சன்னிதானம் செல்லும் வழி வரை சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கூடுதல் கோவில் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலுக்குள் புகுந்த குரங்குகளை விரட்ட தொடங்கினார். ஆனால் குரங்குகள் அங்கும், இங்கும் தாவி ஊழியர்களுக்கு போக்கு காட்டியது.

    சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கோவிலுக்குள் இருந்த குரங்குள் அனைத்தும் வெளியே விரட்டப்பட்டன. இதன் பின்னரே கோவில் ஊழியர்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர்.

    குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பக்தர்கள் தரிசனம், அபிஷேகம் ஆகியவை சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் திருத்தணி மலைக்கோவில் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    திருத்தணி கோவிலில் குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சிங்கம்புணரி அருகே குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க தென்னை மரங்களில் பாம்பு ஓவியத்தை விவசாயிகள் வரைந்தனர்.
    • இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை வளர்க்கும் விவசாயிகள் சிலர் பருவமழையை நம்பி மானாவாரியாகவும், மற்ற விவசாயிகள் கிணற்று பாசனத்திலும் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.

    இங்கு மலைபகுதிகளும், வனப்பகுதிகளும் அதிகம் உள்ளதால் குரங்குகள் ஏராளமாக இருக்கிறது. அவை உணவு தேடி கிராம பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள வயல் மற்றும் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகிறது.

    பிரான்மலை வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் அணில்கள் இந்த தென்னை மரத்தை தேடி வந்து தென்னை மரத்தில் ஏறி அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை கடித்தும் பறித்தும் சேதப்படுத்துவதியும், அதில் உள்ள தண்ணீரை குடித்தும் விடுகிறது.

    இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. ரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், அவைகளிடம் இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

    இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் முதலில் ஒரு சில மரங்களில் முள்வேலி அமைத்து பார்த்தனர். அதை குரங்குகள் லாவகமாக அகற்றிவிட்டு மேலே ஏறி சென்று தேங்காய்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் தற்போது வித்தியாசமாக புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பு நெளிவது போன்ற ஓவியத்தை தனித்தனியாக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பெயிண்டு மூலம் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தை காணும் குரங்குகள் மற்றும் அணில்கள் தென்னை மரத்தில் நிஜபாம்புதான் இருக்கிறது என நினைத்து பயந்துபோய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி ஒடுவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரனன் கூறியதாவது:-

    இந்த பகுதியில் குரங்குகள் அதிகமான அளவில் தொந்தரவு செய்து தேங்காய் விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குரங்குகள் தென்னை மரத்தின் மீது ஏறி குறும்பைகள், இளநீர் காய்கள் மற்றும் பூக்களை சேதப்படுத்துவதால் தென்னை மரத்தில் அதிக விளைச்சல் காண முடியவில்லை.

    குரங்குகளுக்கு பாம்பு என்றால் பயம் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அதை மனதில் வைத்து எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்துள்ளேன். தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்ததால் இந்த படத்தை பார்த்த குரங்குகள் நிஜ பாம்பு என்று பயந்து மரத்தில் ஏறுவதில்லை. இதனால் எனக்கு தென்னை விவசாயத்தில் சரியான மகசூல் கிடைத்து வருகிறது.

    இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்தால் பாம்பு ஓவியத்தை தென்னை மரத்தில் விவசாயிகள் அனைவரும் வரைந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு குரங்குகள் சேட்டை செய்து வருகிறது.
    • குரங்குகளை பிடிக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை ராமசாமி நகர் பகுதியில் வனத்தில் இருந்து தப்பி வந்த இரண்டு குரங்குகள் சேட்டை செய்து வருகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தி வருகிறது. இதனால் அனைவரும் பதட்டம் அடைந்து வருகின்றனர் .மேலும் அருகில் உள்ள மளிகை கடைமற்றும் பெட்டிக்கடைகளில் தின்பண்டங்களை எடுத்துச் சென்று விடுகிறது. எனவே வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உணவு தேடி இடம் பெயர்தல் காரணமாக பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் தஞ்சமடைந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • பகல் நேரத்தில் உணவு தேடி வீடுகள், கடைகளுக்கு உள்ளே குரங்குகள் செல்லுவதால் பொதுமக்கள் அச்சமடைத்துள்ளனர். மேலும் தெருக்களில் பெண்கள் நடமாட அச்சம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதி மற்றும் சென்னிமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகிறது.

    இந்நிலையில் உணவு தேடி இடம் பெயர்தல் காரணமாக பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் தஞ்சமடைந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    பகல் நேரத்தில் உணவு தேடி வீடுகள், கடைகளுக்கு உள்ளே குரங்குகள் செல்லுவதால் பொதுமக்கள் அச்சமடைத்துள்ளனர். மேலும் தெருக்களில் பெண்கள் நடமாட அச்சம் அடைந்து வருகின்றனர். குழந்தைகளை சிலநேரம் குரங்குகள் துரத்துகின்றன.

    இதன் காரணமாக அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறை அலுவலர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க காஞ்சிகோவில் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குரங்குகளுக்கு பிடித்த உணவுடன் கூடிய இரும்பு கூண்டுகளை வைத்துள்ளனர்.

    இதனையடுத்து பிடிபடும் குரங்குளை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    ×