search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி அமித்ஷா
    X
    மத்திய மந்திரி அமித்ஷா

    மத்திய மந்திரி அமித்ஷா 28ந் தேதி தமிழகம் வருகை

    மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 28-ந் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நீலகிரி வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வரத் தொடங்கி உள்ளார்கள்.

    வருகிற 19-ந் தேதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும், 21-ந் தேதி ராஜ்நாத்சிங்கும் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்கள்.

    மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 28-ந் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நீலகிரி வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    அதைதொடர்ந்து கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் அங்கிருந்து விழுப்புரம் செல்கிறார். அங்கு பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து புதுவை மாநிலம் செல்கிறார். அங்கு பா.ஜனதா பொது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

    ஒரே நாளில் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா அன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    Next Story
    ×