search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

    சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 744-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 656 ஆகவும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 457 ஆகவும் இருந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 744-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 468 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து ரூ.75 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்கிறது.
    Next Story
    ×