search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்
    X
    கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை- கவர்னர்

    கேரள அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
    சென்னை:

    2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

    * மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு செய்ததன் மூலம் சமூக நீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

    * ஜெயலலிதா நினைவிடம், வேதா நிலையம் திறப்பு, ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் அறிவிப்புகளை கவர்னர் சுட்டிக்காட்டினார்.

    * பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்ட கேரளாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

    * கேரள அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

    * பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறிகள் தெரிகின்றன.

    * மத்திய அரசின் உதவிக்காக காத்திராமல் உரிய நேரத்தில் தமிழக அரசு விவசாயிகளுக்கு நிதி வழங்கி உள்ளது.

    * முதல்வரின் உதவி மையத்தில் 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால், வீட்டிலிருந்தே அரசின் சேவையை விரைவில் பெற இயலும்.

    * நிவர் புயர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு தேவையான நிதியை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.

    * நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

    * தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

    * இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை மீட்டெடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

    * கொரோனாவை எதிர்கொள்ள அரசு இயந்திரங்களை திறம்பட ஒருங்கிணைத்த பெருமை முதல்வரையே சாரும்.

    * பெருந்தொற்று காவல்துறையினர் ஆற்றிய பங்கிற்கு கவர்னர் உரையில் பாராட்டு தெரிவித்தார்.
    Next Story
    ×