என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  பல்லடம் அருகே வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அருகே பொங்கலூரில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
  தாராபுரம்:

  பல்லடம் அருகே பொங்கலூர் தொட்டியபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 29). இவர் கொடுவாய்ப்பகுதியில் டைலர் கடை நடத்தி வந்தார். இவர் குண்டடம் வெங்கிட்டிபாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 17 வயது சிறுமியிடம் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசி வந்தார்.

  அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்‌. சிறுமியின் பெற்றோர் தனது மகளை தேடி பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

  புகாரின் பேரில் போலீசார் குணசேகரன் சிறுமியிடம் அடிக்கடி செல்போனில் பேசியதை கண்டுபிடித்தனர். குணசேகரன் மற்றும் சிறுமியை தேடி போலீசார் சென்ற போது குணசேகரன் சிறுமியை கொடுவாய் பகுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

  இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி குணசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குணசேகரனுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆகி தற்போது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×