search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை

    10 மாதமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை எழும்பூர் - புதுச்சேரி ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    சென்னை:

    கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ரெயில் போக்குவரத்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

    அனைத்து ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன. 10 மாதமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை எழும்பூர் - புதுச்சேரி ரெயில் சேவை மீண்டும் தொடங்குகிறது.

    வருகிற 31-ந் தேதி முதல் இந்த சேவையை தொடங்குவதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி, மைசூர் உள்ளிட்ட 4 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    எழும்பூரில் இருந்து மாலை 6.10 மணிக்கு விரைவு சிறப்பு ரெயில் (06115) புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு புதுச்சேரி யை சென்று அடையும்.

    இதேபோல புதுச்சேரியில் இருந்து தினசரி அதிகாலை 5.35 மணிக்கு விரைவு சிறப்பு ரெயில் (06116) புறப்பட்டு காலை 9.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் (06021) புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு மைசூரை சென்றடையும்.

    மறு மார்க்கமாக மைசூரில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரெயில் (06022) புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும். இந்த ரெயில் சேவை வருகிற 30-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.

    Next Story
    ×