search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்த காட்சி
    X
    தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்த காட்சி

    தேவூர் அருகே தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

    தேவூர் அருகே கத்தேரி, புளியம்பட்டி, மொத்தையனூர் உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.
    தேவூர்:

    தேவூர் அருகே கத்தேரி, புளியம்பட்டி, மொத்தையனூர் உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான அந்தியூர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    சங்ககிரி ஒன்றிய செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். கூட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி 250 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோர் சால்ைவ அணிவித்து வரவேற்றனர்.

    கூட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் பேசும்போது, தி.மு.க. ஆட்சியில் அருந்ததியர்களுக்கு அரசு வழங்கிய உள் ஒதுக்கீட்டில் அரசுத்துறையில் அருந்ததியர் மக்கள் நிறைய பேர் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர், என்றார்.

    கூட்டத்தில், சேலம் மேற்கு மாவட்ட துணை பொறுப்பாளர் சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×