
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் 01.01.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட வரும் 29-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை காங்கேயம், தாராபுரம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, மடத்துக்குளம், உடுமலை பேட்டை, ஊத்துக்குளி ஆகிய தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் வந்து விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் 1950 என்ற இலவச எண் அல்லது www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் முகாம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் வர முடியாத, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் விவரங்களை அந்தந்த பகுதி தாசில்தார் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். அறை எண் 23 மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்ற முகவரிக்கு தபாலில் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.