என் மலர்

  செய்திகள்

  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
  X
  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

  ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் -எடப்பாடி பழனிசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.
  கோவை:

  ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். இன்று இரண்டாவது நாளாக கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

  காலையில் புலியகுளத்தில் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்னிலையில் பேசியதாவது:-

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். கடவுளை இழிவாக பேசியவர்கள் கையிலே கடவுள் வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார். அதிமுகவுக்குத் தான் வரம் கொடுக்கப் போகிறார். 

  மு.க.ஸ்டாலின் உண்மையை சொல்லி வாக்கு கேட்டால், குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கும். ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் உயர அடித்தளம் போட்டது அதிமுக அரசு. ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்று; உள்ளே இருப்பது வேறு ஒன்று.

  கோவையில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை அமைக்க பிரதமரிடம் கோரிககை விடுத்துள்ளேன். 

  இவ்வாறு அவர் பேசினார்.
  Next Story
  ×