search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வருமாறு மாணவரை அழைத்த ஆசிரியர்கள்.
    X
    பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வருமாறு மாணவரை அழைத்த ஆசிரியர்கள்.

    மாணவர்களுக்கு முககவசம் வழங்கி பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள்

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்ற ஆசிரியர்கள் முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கி பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வருமாறு அழைப்பு விடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவி செய்வதில் சிறந்த முன் உதாரணமாக திகழும் இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், கொரோனா ஊரடங்கு சமயத்தின்போது இப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும், ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தனர். பாடங்களை கற்க வசதியாக உதவி தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் செல்போன்கள் வாங்கி கொடுத்தார்.

    இந்தநிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன்கருதி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதையடுத்து, இப்பள்ளியை சேர்ந்த உதவி தலைமைஆசிரியை பைரவி, ஆசிரியர்கள் செல்வராஜ், சுரேஷ் ஆகியோர் நேற்று எளம்பலூரில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கி பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வருமாறு அழைப்பு விடுத்தனர்.
    Next Story
    ×