search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.417 கோடிக்கு மது விற்பனை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 417 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
    சென்னை:

    பொங்கல் மற்றும் போகி பண்டிகைகளை முன்னிட்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.417 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த 13 ஆம் தேதி போகி பண்டிகையன்று 147 கோடியே 75 லட்சம் ரூபாய், நேற்று 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று 269 கோடியே 43 லட்சம் ரூபாய் என 2 நாட்களில் மொத்தம் 417 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

    போகி பண்டிகையன்று சென்னையில் ரூ.39.8 கோடி, திருச்சியில் ரூ.29.23 கோடி, சேலத்தில் ரூ.26.72 கோடி, மதுரையில் ரூ.28.15 கோடி, கோவையில் ரூ.24.57 கோடி என மொத்தம் ரூ.147.75 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

    இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையன்று சென்னையில் ரூ.54.47 கோடி, திருச்சியில் ரூ.56.39 கோடி, சேலத்தில் ரூ.53.18 கோடி, மதுரையில் ரூ.55.25 கோடி, கோவையில் ரூ.50.18 கோடி என மொத்தம் ரூ.269.43 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×