search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக்கிடங்கை காணலாம்
    X
    நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக்கிடங்கை காணலாம்

    ரூ.134 கோடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க தனி கிடங்குகள்- சத்யபிரத சாகு தகவல்

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.134 கோடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக தனி கிடங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் ‘விவிபேட்’ எந்திரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனியாக கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

    இதற்காக ரூ.134 கோடியை தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதில் தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தேனி மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரக்கிடங்கு கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இதன் கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இறுதிப்பணிகள் முடிந்து வரும் மார்ச் மாதத்திற்குள் பயனுக்கு வந்துவிடும்.

    சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரக்கிடங்கு கட்டுவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×