search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் எத்தனை பேர்?- கணக்கெடுப்பு தீவிரம்

    புதிய கொரோனா பரவலை தடுக்க இங்கிலாந்து சென்று வந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு திருப்பூர் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா வைரஸ் மீது உலக நாடுகளின் கவனம் இருக்கும் நிலையில், இங்கிலாந்தில் ஒருவித புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரசின் மற்றொரு வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய வகை வைரசானது ஏற்கனவே பாதிப்புகளை உருவாக்கி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு முதன்முதலில் ஒப்புதல் அளித்த நாடு இங்கிலாந்து ஆகும். அங்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் முதியவர்கள் என முன்னுரிமைதாரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் புதிய வகையான தொற்று அங்கு பரவி வருவது உலக நாடுகளை மீண்டும் அச்சமடைய செய்துள்ளது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து சென்று வந்தவர்கள் குறித்து அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூரில் இருந்து பின்னலாடை வர்த்தகம் தொடர்பாக தொழில்துறையினர் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இங்கிலாந்து சென்று வந்தவர்களின் விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை சேகரித்துள்ளது. இதில் 31 பேர் சென்று வந்தது தெரியவந்தது. இவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை.

    இருப்பினும் அந்த வைரஸ் பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சென்று வந்தவர்கள் அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை செய்யப்படும். இதுவரை 31 பேர் தான் கண்டறியப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×