search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது விற்பனை
    X
    மது விற்பனை

    புத்தாண்டையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 250 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் வழக்கத்திற்கு அதிகமாக மது விற்பனை நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் பார்கள் செயல்படாமல் இருந்து வந்தன.

    இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 29-ந்தேதி முதல் பார்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் மதுபிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதற்கிடையில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பார்களும் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் பீர் ரூ.86 லட்சத்திற்கும், மது வகைகள் ரூ.6 கோடியே 42 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் தினமும் சுமார் ரூ.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் புத்தாண்டை கொண்டாடும் வகையில் மதுபிரியர்களின் அதிக அளவு வருகையால் வழக்கத்தை விட அதிமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×