search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஜனவரி 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

    தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும்.

    * வடகிழக்கு பகுதியில் இருந்து தொடர்ந்து காற்று வீசிக்கொண்டிருப்பதால் மழை தொடரும்.

    * வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 449.7 மி.மீ.க்கு பதில் 477 மி.மீ. பதிவானது

    * தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பதிவாகி உள்ளது.

    * தென்மேற்கு பருவமழை 342 மி.மீ.க்கு பதில் 421 மி.மீ. பதிவானது. இது இயல்பை விட 24 சதவீதம் அதிகம்.

    * 2020ம் ஆண்டில் 946 மி.மீ.க்கு பதிலாக 984 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×