search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சிவன்அருள்
    X
    கலெக்டர் சிவன்அருள்

    அரசு தடையால் பாதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம்- கலெக்டர் தகவல்

    அரசு தடையால் பாதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மண்வளம் காக்க ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள. அந்த நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 1.1.2019 நிலவரப்படி நிலுவையில் உள்ள வங்கிக்கடன் தொகையில் 50 சதவீதம், அதிகபட்சமாக நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வரை பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு வேலூர் வேலூர் மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×