
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 73 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 11,875 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1 ஆயிரத்து 910 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.