search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 20 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 10 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 95 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 60 சதவீதமாகவும் இருக்கும்.

    சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மின்னல் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க மழை வரும் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. கால்நடைகளை முள்கம்பி வேலி அல்லது மரங்களின் அருகில் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    நைட்ரேட் அதிகம் உள்ள தீவன பயிர்களை கால்நடைகள் உண்ணும்போது, நைட்ரேட் நச்சு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கொண்டு தீவன பயிர்கள் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும்.

    கறவை மாடுகளுக்கு தேவையான அளவு கலப்பு தீவனம் அல்லது தானியங்கள், தாது உப்பு கலவை கொடுப்பதால் ஒரளவுக்கு நைட்ரேட் நச்சு தாக்கத்தை குறைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×