search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.முருகன்
    X
    எல்.முருகன்

    வேல் யாத்திரையில் அமித் ஷா பங்கேற்க மாட்டார் -எல்.முருகன்

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-

    உள்துறை மந்திரி அமித் ஷா, அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    சென்னை வரும் அமித் ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அமித் ஷாவின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு  பயத்தை தரும்.

    21ம் தேதி வேல் யாத்திரை கோவையில் இருக்கும் என்பதால் யாத்திரையில் அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×