search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தேனி:

    ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறையால் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலையால், கண் விழித்திரை அடிப்படையில் விற்பனை செய்ய ஆவண செய்ய வேண்டும், 4-ஜி சிம் கார்டுடன் புதிய விற்பனை முனையம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் தேனி ஒன்றிய தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ரேஷன் கடை ஊழியர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×