search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration shop worker"

    • கூட்டுறவு நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் 100 பேர், எடையாளர்கள் 18 பேர் என மொத்தம் 118 பேர் தி.மு.க. தொழிற் சங்கத்தில் இணைத்து கொண்டனர்.
    • ரேசன்கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்களை நீங்கள் தான் முறையாக அவர்களுக்கு வழங்கி ,அந்த பணிகளை நல்லமுறையில் செய்ய வேண்டும் என்று கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட வட்டார நிர்வாகிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் வேலாயுதம் தலை மை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் அல மேலு வரவேற்று பேசினார்.

    அதில் கூட்டுறவு நியாய விலைக்கடை விற்ப னையாளர்கள் 100 பேர், எடையாளர்கள் 18 பேர் என மொத்தம் 118 பேர் தி.மு.க. தொழிற் சங்கத்தில் இணைத்து கொண்டனர்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. தொழிற்சங்கத்தில் இணைந்த அனைவரையும் பாராட்டுகிறேன். தி.மு.க. ஆட்சி அமைந்தபின் நமது தலைவர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு திட்டங்களையும் தொலைநோக்கு பார்வையோடு அறிவிப்பு செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று பணி யாற்று கிறார்.

    அதனடிப்படையில் பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் அரசு வழங்கி வருகிறது. அந்த பொருட் களை நீங்கள் தான் முறையாக முறைப்படுத்தி அவர்களுக்கு வழங்கி இந்த அரசுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் இடத்தில் அமர்ந்துள்ளீர்கள் அந்த பணிகளை நல்லமுறையில் செய்ய வேண்டும். அதில் எதுவும் குறைபாடுகள் இருந்தால் எனது கவன த்திற்கு கொண்டு வாருங்கள் அதை அதிகாரிகளிடம் பேசி சரி செய்து தருகிறேன் என்று பேசினார்.

    தமிழக அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட நியாய விலைக்கடை விற்ப னையா ளர்கள் எடை யாளர்கள் சங்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டனர். கட்டுப் பாடற்ற பொரு ட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வலியுறுத்தக் கூடாது, அனைத்து வட்டார நிர்வாகி கள் அனைவரும் அந்தந்த விற்பனை யாளர்களை சந்தித்து சங்க உறுப்பின ர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பர மசிவன், துணைச் செயலாளர் சண்முகராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வராஜ், சிவன்முருகன், தொ.மு.ச. கண்ணுச்சாமி, தர்மராஜ் மற்றும் செண்பக ராஜ், மாவட்ட வட்டார நிர்வாகிகள் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேசன்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
    • தென்காசி மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.

    தென்காசி:

    உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரியும் ரேசன்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தென்காசி மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.

    • கடலூரில் ரேசன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் சார்பில் சரியான எடையில் நூல் மாற்றி அரிசி மூட்டைகளை இறக்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் இயற்றி வரும் லாரிகளில் எடை தராசுடன் வரவேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். லாரிகளில் நகர்வு பணியாளர்கள் உடன் வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள கூட்டுறவு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் முத்து பாபு, நடராஜன், செல்லதுரை, பாஸ்கர், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் ஜெயச்சந்திர ராஜா, சரவணன், பிரகாஷ், சேகர், கணேசன், பழனிச்சாமி உட்பட கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    பேரையூர்:

    நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    இது குறித்த ஆலோ சனைக் கூட்டம் மாநில துணைத் தலைவர் செல்லத் துரை தலைமையில் நடை பெற்றது.

    பின்னர் முன்னாள் மாநிலத்தலைவர் பால் பாண்டி கூறியதாவது:-

    ஊதிய மாற்றம், அரசு பணியாளர்களுக்கு வழங்குவதை போல அகவிலைப்படி வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவ காப்பீட்டுத்திட்டம், மாற்றுத் திறனாளிக்கு படி ரூபாய் ஆயிரத்தில் இருந்து 2,500 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

    தீபாவளி முன்பணமாக மாநில அரசு ரூபாய் 5,000 வழங்கி வருகிறது. மற்ற மாநிலங்கள் முன்பணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்கு வதால் தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர் களுக்கு மற்ற மாநிலங்களை போல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாநில நிர்வாகிகள் பால முருகன், அருணாச்சலம், சிவக்குமார் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×