search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

    சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,520 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று 5,610 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.41,819 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,263 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையில் இன்று ஒருநாளில் 1,295 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர்   185   
    செங்கல்பட்டு   2,170   
    சென்னை   11,320   
    கோயம்புத்தூர்   5,027   
    கடலூர்      1,482   
    தருமபுரி      915   
    திண்டுக்கல்   414   
    ஈரோடு      1,117   
    கள்ளக்குறிச்சி   404   
    காஞ்சிபுரம்   887   
    கன்னியாகுமரி   885   
    கரூர்      462   
    கிருஷ்ணகிரி   814   
    மதுரை      725   
    நாகப்பட்டினம்   488   
    நாமக்கல்   1,066   
    நீலகிரி      896   
    பெரம்பலூர்   123   
    புதுகோட்டை   719   
    ராமநாதபுரம்   149   
    ராணிப்பேட்டை   455   
    சேலம்      2,794   
    சிவகங்கை   245   
    தென்காசி   416   
    தஞ்சாவூர்   1,513   
    தேனி      497   
    திருப்பத்தூர்   511   
    திருவள்ளூர்   1,647   
    திருவண்ணாமலை1,009   
    திருவாரூர்   952   
    தூத்துக்குடி   587   
    திருநெல்வேலி   897   
    திருப்பூர்      1,591   
    திருச்சி      775   
    வேலூர்      848   
    விழுப்புரம்   979   
    விருதுநகர்   279   
    விமான நிலையத்தில் தனிமை   2   
    உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை   16   
    ரயில் நிலையத்தில் தனிமை   2   

    மொத்த எண்ணிக்கை   46,263
    Next Story
    ×