search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்... எஸ்பிபி மறைவுக்கு கமல் இரங்கல்

    பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன், எஸ்.பி.பி. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது தனக்கு வாய்த்த பேறு என குறிப்பிட்டுள்ளார்.
    சென்னை:

    உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நடிகரும் மக்கள் நிதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எஸ்.பி.பி.யுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் வீடியோ தொகுப்பையும் பதிவிட்டுள்ளார்.

    டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பின்னணி பாடகர் 'பத்ம பூஷன்' திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியம்  காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தன் வசீகரமிக்க  குரலால் மொழிகளைக் கடந்து  மக்களின் நேசத்தைப் பெற்றவர் எஸ்.பி.பி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் ஜொலித்தவர். எஸ்.பி.பி.யின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும்,  திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறி உள்ளார்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு பேரிழப்பு என இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி மறைவு இசை உலகத்திற்கே மிக பெரிய துயரமான நாள் என பாடகர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×