search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த செல்வம்
    X
    முக ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த செல்வம்

    அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்க மாநில தலைவர் பதவியில் உள்ளார்.

    இந்நிலையில், செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து இன்று மாலை 7 மணிக்கு கே.ஏ.கே.செல்வம் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

    தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. அரசின் மூத்த அமைச்சரின் உடன் பிறந்த அண்ணன் மகன் தி.மு.க.வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×