search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலா இம்மாத இறுதியில் விடுதலையாக முடியும்- வக்கீல் தகவல்

    கோப்புகளை சிறைத்துறையினர் ஆய்வு செய்தால் சசிகலா இம்மாத இறுதியில் விடுதலையாக முடியும் என்று வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்கு சென்ற சசிகலா 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் வெளியே வருவார் என்று சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

    ஆனால் நன்னடத்தை காரணமாக அவர் முன்கூட்டியே விடுதலையாகி விடுவார் என்று சசிகலா தரப்பு வக்கீல்கள் கூறி வருகின்றனர்.

    இதுபற்றி சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

    சசிகலா வழக்கை பொறுத்தவரை அவர் முன் கூட்டியே விடுதலையாக அதிக வாய்ப்புள்ளது. 4 ஆண்டு அவர் சிறை தண்டனை பெற்று இருந்தாலும் எல்லா கைதிகளுக்கும் கிடைக்கக் கூடிய விடுமுறை சலுகைகள் சசிகலாவுக்கும் பொருந்தும். அந்த வகையில் சசிகலா இந்த மாத இறுதியில் விடுதலையாக முடியும்.

    சசிகலா சம்பந்தப்பட்ட கோப்புகளை சிறைத்துறையினர் ஆய்வு செய்தாலே போதும். அவர் முன்கூட்டியே விடுதலையாகி விடுவார். அதற்கான தகுதி சசிகலாவுக்கு உள்ளது.

    கடந்த 1997 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் சசிகலா 35 நாட்கள் வரை சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்கள் இப்போதைய தண்டனையில் இருந்து கழிக்கப்பட வேண்டும்.

    கடந்த வருடம் 17 நாட்கள் பரோலில் அவர் வெளியே வந்துள்ளார். இதை கழித்து பார்த்தால் 18 நாட்கள் உள்ளது. இது தவிர நன்னடத்தை விதிகள், கைதிகளுக்கான விடுமுறை நாட்களை கழிக்கும்போது அவர் இந்த மாத இறுதியில் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    தற்போது கொரோனா காலமாக உள்ளதால் சிறையில் உள்ளவர்களை பார்க்க சிறைத்துறையினர் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை கர்நாடகா சிறையில் இருப்பவர்களை சென்று சந்திக்க முடியவில்லை.

    நாங்கள் சசிகலாவை சந்தித்து பேசுவதற்கு சிறைத் துறையில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம்.எங்களுக்கு அனுமதி கிடைக்கும் போது சசிகலாவை நேரில் பார்த்து விடுதலை சம்பந்தமாக பேசுவோம். சிறைத்துறை அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்போம்.

    அதன் பிறகே சசிகலா எப்போது வெளியே வருவார் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×