search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஆரணியில் 2 நிதி நிறுவனங்களின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளை

    ஆரணியில் பட்டப்பகலில் 2 நிதி நிறுவனங்களின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.
    ஆரணி:

    ஆரணி பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்தவர் லோகு (வயது 39). இவர், காந்தி ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று பகல் நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். மீண்டும் நிதி நிறுவனத்துக்கு வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் முகப்புக்கண்ணாடி கதவை கம்பியால் நெம்பி பூட்டை உடைத்து, உள்ளே சென்று மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.75 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அவர் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் ஆரணி, ஆரணிபாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆர்.குபேரன். இவர் தனது நண்பர்களும் சேர்ந்து ஆரணி கார்த்திகேயன் சாலையில் ஆட்டோ பைனான்ஸ் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்றார். மதியம் 2.45 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, கண்ணாடி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு நிதி நிறுவனம் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயர் திறந்து கிடந்தது. அதில் கைப்பையில் வைத்திருந்த ரூ.1½ லட்சம், வங்கி ஏ.டி.எம். கார்டுகள், பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து அவர் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணியில் நேற்று பட்டப்பகலில் 2 நிதி நிறுவனங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×