search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரூ.3 கோடி கடன் தருவதாக கூறி விழுப்புரம் லாரி உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி

    ரூ.3 கோடி கடன் தருவதாக கூறி, விழுப்புரம் லாரி உரிமையாளரிடம் ரூ. 10 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் அவினாசி அருகே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அவினாசி:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தொழில் அபிவிருத்திக்காக பணம் தேவைப்படுவதாக தனது நண்பர் சேதுராமனிடம், பிரபாகரன் கூறியுள்ளார். அப்போது அவர் ஒரு ஆங்கில பத்திரிகையில் கடன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    அப்போது எதிர்முனையில் பேசியவர் தன் பெயர் ஆச்சார்யா என்றும், ரூ. 10 லட்சம் பதிவுத்தொகையுடன் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு வாருங்கள். அங்கு தன்னிடம் ரூ. 10 லட்சத்தை கொடுத்துவிட்டு நீங்கள் கேட்ட ரூ.3 கோடியை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் அவினாசியில் குறிப்பிட்ட ஓட்டலுக்கு வந்து ஆச்சார்யாவிடம் ரூ. 10 லட்சத்தை கொடுத்துள்ளனர்.

    ஆச்சார்யா ஏற்கனவேதான் கொண்டுவந்திருந்த பிரிப்கேசை திறந்து இதில் ரூ. 2 கோடியே 10 லட்சம் உள்ளது. அசல் பத்திரத்தை திண்டிவனத்தில் வந்து கொடுத்துவிட்டு மீதி ரூ.90 லட்சத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி பிரிப்கேசை உடனே மூடி பூட்டி அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து காரில் சென்றுவிட்டார். பின்னர் பிரபாகரன் தனது வீட்டிற்கு வந்து பிரிப்கேசை திறந்து நோட்டு கட்டுகளை பார்த்தபோது அவை அனைத்தும் குழந்தைகள் வைத்து விளையாடும் போலி ரூபாய் நோட்டு என்பதை அறிந்து தான் மோசடி செய்யப்பட்டு விட்டதாக அதிர்ச்சியடைந்துள்ளார்.

    இது குறித்து அவினாசி போலீசில் பிரபாகரன் புகார் செய்தார். புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட மோசடி மன்னன் ஆச்சார்யாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே சென்னை தம்பதியிடம் ஆச்சார்யா ஒரு கோடி கடன் தருவதாக கூறி, ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுஅவினாசி அருகே மீண்டும் இந்த சம்பவம் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×