search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் 1,248 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

    தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 495 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாட்டில் வந்தவர்களில் 1 பேருக்கும், உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது. 

    மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 406 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 89
    செங்கல்பட்டு - 419
    சென்னை - 1,248
    கோவை - 498
    கடலூர் - 383
    தர்மபுரி - 14
    திண்டுக்கல் - 88
    ஈரோடு - 148
    கள்ளக்குறிச்சி - 228
    காஞ்சிபுரம் - 193
    கன்னியாகுமரி - 122
    கரூர் - 49
    கிருஷ்ணகிரி - 69
    மதுரை - 131
    நாகை - 135
    நாமக்கல் - 69
    நீலகிரி - 36
    பெரம்பலூர் - 23
    புதுக்கோட்டை - 108
    ராமநாதபுரம் - 23
    ராணிப்பேட்டை - 196
    சேலம் - 326
    சிவகங்கை - 33
    தென்காசி - 84
    தஞ்சாவூர் - 117
    தேனி - 176
    திருப்பத்தூர் - 34
    திருவள்ளூர் - 293
    திருவண்ணாமலை - 168
    திருவாரூர் - 95
    தூத்துக்குடி - 91
    திருநெல்வேலி - 139
    திருப்பூர் - 93
    திருச்சி - 138
    வேலூர் - 166
    விழுப்புரம் - 183
    விருதுநகர் - 63
    விமான நிலைய கண்காணிப்பு
    வெளிநாடு - 1
    உள்நாடு - 7
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 6,495
    Next Story
    ×