என் மலர்

  செய்திகள்

  மருத்துவ முகாம்
  X
  மருத்துவ முகாம்

  கொரோனா தொற்று தடுப்பு மருத்துவ முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நொய்யல் அருகே குந்தாணிபாளையம் நத்தமேட்டில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  நொய்யல்:

  நொய்யல் அருகே குந்தாணிபாளையம் நத்தமேட்டில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க வெளியில் செல்லும்போது முககவசம் அணியவேண்டும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், வெளியில் சென்று வந்தபின் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடாது என்று அறிவுரை கூறி, துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

  இதில் மருத்துவ குழுவினர் வேட்டமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சத்து மாத்திரைகள், கொரோனா வைரஸ் எதிர்ப்பு மாத்திரை மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் பூபதி மற்றும் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×