search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூரில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள், மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள், மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூலி உயர்வு கேட்டும், புதிய பதவியான கேங்மேன் பணி நியமனத்தை நிறுத்தி வைக்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கடந்த 15 ஆண்டுகளாக 87 பேர் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுவரை தினக்கூலி உயர்வு செய்யவில்லை. இரவு, பகல் என பார்க்காமல் மின்பராமரிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறோம். தற்போது எங்கள் தொழிலை பாதிக்கும் வகையில் கேங்மேன் என்ற புதிய பணியாளர்களை பணிக்கு அமர்த்தி மாதம் ரூ.18 ஆயிரத்து 500 ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இது முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களை பாதிப்பதாக உள்ளது. ஆகவே தமிழக அரசு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களை நிறுத்தி, ஒப்பந்த ஊதியத்தில் பணிபுரியும் எங்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    Next Story
    ×