search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க.
    X
    தே.மு.தி.க.

    திண்டிவனத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    திண்டிவனம் நகர தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மரக்காணம் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது.
    திண்டிவனம்:

    திண்டிவனம் நகர தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மரக்காணம் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டிவனம் நகர செயலாளர் காதர்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். 

    கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும் கொண்டாட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. 

    இதில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் வெங்கடேசன், நகர அவைத்தலைவர் செல்வம், மாவட்ட நிர்வாகி கவுஸ், நகர பொருளாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், வரதன், நகர இளைஞரணி துணை செயலாளர் பாஸ்கர், வர்த்தக அணி செயலாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வருகின்றனர்.
    Next Story
    ×