search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் சப்-கலெக்டர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் சப்-கலெக்டர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் சப்-கலெக்டர் ஆய்வு

    தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் சப்-கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு செய்தார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்-ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் அவர்களுக்கு வேறு எந்தவிதமான தொந்தரவும் இல்லை என்றால் பொள்ளாச்சியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்படுகின்றனர். தொந்தரவுகள் இருந்தால் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இதற்கிடையில் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூடுதலாக கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கட்டில், மெத்தைகள் போடப்பட்டு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு வார்டை சப்-கலெக்டர் வைத்திநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வார்டில் செய்யப்பட்ட வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது தாசில்தார் தணிகவேல், வருவாய் ஆய்வாளர் பட்டுராஜா, கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-

    பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை தாலுகாக்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் 160 படுக்கைகளும், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 படுக்கைகள், நாச்சிமுத்து பிரசவ விடுதியில் 30 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகா பகுதிகளில் இதுவரைக்கும் 145 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 110 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35 பேர் மட்டும் தான் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையில் கூடுதலாக ஜோதி நகரில் ஒரு திருமண மண்டபத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 130 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×