search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்- 5வது முறையாக கோட்டார் போலீஸ் நிலையம் மூடல்

    போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கோட்டார் போலீஸ் நிலையம் 5-வது முறையாக மூடப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அனேக போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்படுவதும், திறப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் உள்ளது. போலீசாருக்கு ஏற்பட்ட தொற்றால் ஏற்கனவே 4 முறை கோட்டார் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக மீண்டும் கோட்டார் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. பின்னர் சுகாதார பணியாளர்களை கொண்டு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
    Next Story
    ×