என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய 2 பேர் கைது
Byமாலை மலர்9 Aug 2020 6:20 PM GMT (Updated: 9 Aug 2020 6:20 PM GMT)
வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா ஆடையூர் தேவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக தேவனந்தலில் இருந்து செங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கம் சாலையில் இருந்து கிரிவலப் பாதைக்கு பிரியும் பகுதியில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கோவிந்தசாமி வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-த்தை பறித்துக் கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கோவிந்தசாமி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு சரவணன் (வயது 21), பேகோபுரத் தெருவை சேர்ந்த விக்னேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story
×