search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடிநீர் வியாபாரமாவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    குடிநீர் வியாபாரமாவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மத்திய அரசின் ஜல்சக்தி மிஷன் திட்டத்தின் பெயரில், தற்போது உள்ள குடிநீர் வினியோக முறையை மாற்றி கட்டணம் செலுத்தி குடிநீர் பெறும் நிலையை ஒவ்வொரு பகுதியிலும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் குடிநீர் இணைப்புக்கு ரூ.3 ஆயிரம் முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். முதல் தவணையாக ரூ.1,000 உடனடியாக செலுத்த வேண்டும். குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொருத்தி, பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துவது போன்ற வழிமுறைகளை கண்டித்தும், கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் குடும்பங்களின் நிலை கருதி, குடிநீர் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். குடிநீருக்கு மீட்டர் பொருத்தக்கூடாது. அனைவருக்கும் இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, சிவகுரு, சரவணன், மாநகரக்குழு உறுப்பினர்கள் ராஜன், மனோகரன், கோஸ்கனி, அப்துல் நசீர், வடிவேலன், ராமு, சாந்தா, வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை ஒன்றியம் சார்பில் நீலகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் பஞ்சவர்ணம், குழந்தையம்மாள், மருதகுடியில் சவுந்தர்ராஜன், ஆலக்குடியில் கோவிந்ரராஜூ, கல்விராயன்பேட்டையில் ஏ.புகழேந்தி, மாத்தூரில் அலெக்ஸ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் மாலதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் அபிமன்னன், ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கிலி முத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    குடிநீர் இணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும், மீட்டர் பொருத்த கூடாது, அனைத்து கிராமங்களிலும் இலவச குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளி, பழமாநேரி, திருச்சின்னம் பூண்டி, ஒரத்தூர், பாதிரக்குடி முல்லைக்குடி ஆகிய ஊர்களில் பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூதலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பூதலூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாஸ்கர் உள்பட 19 பேர் மீது பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்தார்.
    Next Story
    ×